சிதம்பரம் அருகே பாசன வாய்க்காலில் செத்து மிதக்கும் நாய்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிதம்பரம் அருகே புது பூளைமேடு கிராமத்தையொட்டி ஓடும் வடக்கு ராஜன் வாய்க்காலில், தற்போது வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்குத் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனை 100 -க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பாசனத்திற்குப் பயன்படுத்துகிறார்கள். அதே நேரத்தில், பொதுமக்களும் குளிப்பது உள்ளிட்ட அனைத்துத் தேவைக்கும் இந்த வாய்க்கால் தண்ணீரை பயன்படுத்துகிறார்கள்.
இந்நிலையில், இந்த தண்ணீரில் நாய்கள் இறந்து மிதக்கிறது. இதனால், இந்தத் தண்ணீரைப் பயன்படுத்துபவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.