Published on 06/05/2020 | Edited on 06/05/2020
உலக நாடுகளை அச்சுறுத்தும் கரோனா வைரஸ், இந்தியாவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமலில் இருந்த ஊரடங்கு, தற்போது மே 17- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் சில தளர்வுகள் மே 4- ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இதையடுத்து தமிழகத்திலும் ஊரடங்கில் சில தளர்வுகள் படிப்படியாக கொண்டுவரப்பட்டன. இந்நிலையில் சென்னையில் நாளை முதல் தனிக்கடைகள் திறக்கலாம். திறக்கப்படும் தனிக் கடைகள் ஏ.சி.இல்லாமல் இயங்க வேண்டும். ஏ.சி.இயங்காது என்ற அறிவிப்பை பலகையை வாடிக்கையாளர்கள் பார்வையில் படும் வகையில் வைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. வணிக வளாகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.