Skip to main content

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது!

Published on 16/03/2018 | Edited on 16/03/2018

2017-2018-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகின்றன. இன்று முதல் தேர்வாக தமிழ் முதல்தாள் தேர்வு நடைபெறுகிறது.
 

exam


தமிழகம் மற்றும் புதுசேரியில் மொத்தம் 12,337 பள்ளிகளிருந்து மொத்தம் 9,64,491 மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர். அதில் 4,81,371 பேர் மாணவர்கள்,4,83,120 பேர் மாணவிகள். தனித்தேர்வர்கள் எண்ணிக்கை ஆண்கள் 11,098 பேர் , பெண்கள் 25,546 பேர் ,திருங்கைகள் மொத்தம் 5 பேர் தேர்வு எழுதவுள்ளனர். 3,659 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர், அவர்களில் 1,898 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு ஒரு மணிநேர கூடுதல் அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது.
 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வுக்காக மொத்தம் 3,609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள. 

 

 

 

சார்ந்த செய்திகள்