பாம்பன் பாலத்தில் இன்று 100-வது விபத்து: கேக் வெட்டி கொண்டாடிய பொதுமக்கள்
இராமநாதபுரம் மாவட்டத்தையும் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாலமாக பாம்பன் பாலம் உள்ளது. இதில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மத்திய அரசு பாம்பன் பாலத்தில் சாலை அமைப்பதற்க்காக 2.70 கோடி ஒதுக்கியது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகளோ கடல் நடுவே உள்ள பாலத்தில் வழு வழு ரப்பர் சாலை அமைத்தனர். ரப்பர் சாலை அமைத்ததிலிருந்தே தொடர்ந்து விபத்து நடந்து வருகிறது. இவ்விபத்துகளில் ஒரு பெண்னும் உயிரிழந்தார்.
இந்நிலையில் கடந்த ஒருவாரமாக ரப்பர் சாலையை நெடுஞ்சாலை துறையினர் அகற்றி வருகின்றனர். ஜே.சி.பி. வைத்து பாம்பன் பாலத்தில் பள்ளம் தோண்டுவதால் குண்டும் குழியுமாகிவிட்டது. இதை தொடர்ந்து இன்று ஒரே நாளில் இரண்டு விபத்துகள் நடந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் பாம்பன் பாலத்திற்கு இத்துடன் 100-வது விபத்து. என அரசை விமர்சனம் செய்து கேக் வெட்டினர் பொதுமக்கள்.
-பாலாஜி