டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடந்தது.
2020- 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கடந்த பிப்ரவரி 14- ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று (17/02/2020) சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இதில் பட்ஜெட் உரை மீதான காரசார விவாதம் நடைபெற்றது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக பேரவையில் பேசிய முதல்வர் பழனிச்சாமி, "டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்ற இரண்டு மையங்களில் மட்டுமே முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தன்னாட்சி பெற்ற அமைப்பான டிஎன்பிஎஸ்சியில் அரசு தலையிடுவதில்லை. 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியிலும் தேர்வு முறைகேடு நடந்துள்ளது என அமைச்சர் கூறினார். தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்." இவ்வாறு முதல்வர் பேசினார்.