Published on 07/06/2021 | Edited on 07/06/2021
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்து வந்தது. இதனால் தனியார் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துக்களும் தடை விதிக்கப்பட்டது. இதனை மீறி வெளியே செல்வோர் இ பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று முதல் மளிகை, காய்கறி உள்ளிட்ட குறிப்பிட்ட கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதே நேரத்தில் சுய தொழில் செய்வோர் முறையாக இ-பதிவு செய்து தங்களின் வேலைகளைப் பார்க்கலாம் என்றும் அறிவுறுத்தியிருந்தது. இதனால் காலை முதலே இ-பதிவு இணையதளம் பிஸியானது. ஒரு கட்டத்தில் பலரும் அதனைப் பயன்படுத்தியதால் அது முடங்கியது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளான நிலையில், தற்போது இணையதளம் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.