Skip to main content

எந்தெந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளில் முன்னிலை!

Published on 02/05/2021 | Edited on 02/05/2021

 

TN ASSEMBLY ELECTION RESULTS LEADING OF THE POLITICAL PARTIES

 

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. 

 

தற்போது வரை, திமுக கூட்டணி 128 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 89 சட்டமன்றத் தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் 1 சட்டமன்றத் தொகுதியில் முன்னிலையில் உள்ளன. 

 

அதிமுக கூட்டணி முன்னிலை நிலவரங்கள்:

அதிமுக - 76 சட்டமன்றத் தொகுதிகள்.
பாஜக - 3 சட்டமன்றத் தொகுதிகள்.
பாமக - 10 சட்டமன்றத் தொகுதிகள்.
தமாக - 0
பிற கட்சிகள் - 0 

 

திமுக கூட்டணி முன்னிலை நிலவரங்கள்:

திமுக - 106 சட்டமன்றத் தொகுதிகள்.
காங்கிரஸ் - 8 சட்டமன்றத் தொகுதிகள்.
விசிக - 4 சட்டமன்றத் தொகுதிகள்.
சிபிஎம் - 3 சட்டமன்றத் தொகுதிகள்.
சிபிஐ - 2 சட்டமன்றத் தொகுதிகள்.
மதிமுக - 4 சட்டமன்றத் தொகுதிகள்.
பிற கட்சிகள் - 1 சட்டமன்றத் தொகுதி.

 

அதேபோல், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டமன்றத் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 7 சட்டமன்றத் தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 3 சட்டமன்றத் தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்