2020- 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கடந்த பிப்ரவரி 14- ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று (17/02/2020) சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இதில் பட்ஜெட் உரை மீதான காரசார விவாதம் நடைபெற்றது.
விவாதத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, ஏழு பேரை விடுவிப்பது பற்றி சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என்ற நிலைமைக்கு காங்கிரஸ் வந்துவிட்டது. பேரறிவாளன் உட்பட ஏழு பேரை விடுவிக்கும் விவகாரத்தில் அரசு தன் கடமையை செய்ய வேண்டும். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி கூட ஏழு பேரையும் மன்னித்து விட்டார்கள். ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தில் போது உயிரிழந்த 16 பேரின் குடும்பத்திற்கு அரசு என்ன செய்தது? என்று கேள்வி எழுப்பிய விஜயதரணி, ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தின் போது உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு உரிய உதவிகளை செய்ய வேண்டும்." என்றார்.