திமுக போராட்டத்துக்கு திவாகரன் ஆதரவு
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் நேற்று மத்திய அரசு சார்பில் கூறப்பட்டது. இதையடுத்து நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று நாளை திமுக தலைமையில் அனைத்துக் கட்சி போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன.
இந்த போராட்டத்திற்கு திவாகரன் ஆதரவு தெரிவித்துள்ளார். திவாகரனின் ஆதரவு தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.