டி.டி.வி. தினகரனின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் சி.வி.சண்முகம் நீக்கப்பட்டதை கண்டித்து திண்டிவனம் நகர செயலாளர் தீனதயாளன் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே டி.டி.வி. தினகரனின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தினகரனுக்கு எதிராக கடும் கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.
அ.தி.மு.க. (அம்மா) துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் 04.09.2017 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் ஆர்.பாலசுந்தரம் (மாவட்ட ஜெயலலிதா பேரவை முன்னாள் செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார் என அதில் கூறப்பட்டுள்ளது.
எஸ்.பி.சேகர்