திருவள்ளூர் மாவட்டத்தில் 4 நாள் டாஸ்மாக் லீவு!
திருவள்ளூர்- மகாவீர் ஜெயந்தி மற்றும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் 4 நாட்கள் இயங்காது என கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள அறிக்கை: ’மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை (9ம் தேதி) திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகள் இயங்காது. மேலும், சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு 12ம் தேதி வாக்குப்பதிவு, 15ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையொட்டி, வரும் 11, 12 ஆகிய நாட்களிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 15ம் தேதியன்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், அதனை சார்ந்த பார்கள் அனைத்தும், கண்டிப்பாக மூடப்பட வேண்டும்என்று தெரிவித்து உள்ளார். ஏற்கனவே, நெடுஞ்சாலையோரம் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால், மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.