Skip to main content

திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு!

Published on 26/08/2020 | Edited on 26/08/2020

 

tiruppur district thirumoorthy dam water released cm palanisamy order

 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி அணையிலிருந்து ஆகஸ்ட் 28- ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

 

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை இரண்டாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பாலாறு படுகை வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை இரண்டாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு 28/08/2020 முதல் மொத்தம் 8,700 மி. கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளேன்.

 

இதனால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கிடவு, சூலூர் வட்டங்கள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர், காங்கேயம், தாராபுரம் வட்டங்களில் உள்ள 94,201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

மேலும் விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்