திருச்சி மதுரை மெயின் ரோட்டில் உள்ள எடமலைப்பட்டிபுதூர் - பஞ்சப்பூர் நெடுஞ்சாலை பிரிவு ரோடு மாநகராட்சி பூங்கா எதிரே உள்ள முட்புதரில் கடந்த 24ம் தேதி அடையாளம் தெரியாத ஒருவர் சரமாரியாக வெட்டி கொல்லப்பட்டு கிடந்தார்.
அந்த வழியே சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் அனைத்து காவல் நிலையங்களிலும் மாயமானவர்கள் பட்டியல் எடுக்கப்பட்டது. இளம் வயது இருப்பதாலும், கழுத்தில் பாசி கயிறு கட்டியும் உடம்பில் 4 இடங்களில் ஆழமாக வெட்டப்பட்டுயிருப்பதும் இரத்தம் எல்லாம் வெளியேறியிருப்பதும் வேறு எங்கையே கொலை செய்து இங்கே கொண்டு போட்டிருக்கிறார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
காணாமல் போனாவர்கள் பட்டியில் இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த இருதயராஜ் மகன் சூர்யா (எ) சூர்யபிரகாஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து பெற்றோர்கள் திருச்சி வந்து உடலை பார்த்து அது மகன் சூர்யாவின் உடல் தான் என உறுதிப்படுத்தினர். இதையடுத்து சூர்யாவின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
உடலை வாங்கி பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருச்சியிலேயே தகனம் செய்தனர். இதன் பிறகு போலிஸ் நடந்திய விசாரணையில் சூர்யாவை 23ம் தேதி தாத்தா உறவு முறையான ஆறுமுகம் என்பவர் அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஆறுமுகத்தை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் முன்னுக்குபின் முரணாக அளித்த பதிலை அடுத்து ஆறுமுகத்திடம் விசாரணையை கடுமைப்படுத்தினார்கள். இது சம்மந்தமாக போலிஸ் தரப்பில் விசாரித்தில் ஆறுமுகத்தின் தம்பி மகன் ஆனந்த் என்பவர் திருமணம் செய்துள்ள பெண் பற்றி சூர்யா, நண்பர்களிடம் தவறாக சொல்லி கிண்டல் பண்ணியிருக்கிறார். அந்த பெண்ணை முதலில் காதலித்ததாகவும், பெண்ணின் செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி. இதனை கணவரிடம் கூறிய நிலையில், அவர் சூர்யாவை கண்டித்துள்ளார். இதில் தாத்தா ஆறுமுகமும் சூர்யாவை கண்டித்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து சூர்யா, அண்ணியிடம் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரடைந்த ஆறுமுகம் மற்றும் மகன்களுடன் சேர்ந்து சூர்யாவை கொலை பண்ண முடிவு செய்து கடந்த 23ம் தேதி சூர்யாவை அழைத்து கொண்டு காரில் வந்த 8 பேர் கும்பல், மதுரை கொட்டாம்பட்டி அருகே இருட்டு பகுதியில் வைத்து சரமாரியாக வெட்டி கொன்றனர். அங்கு ரத்தம் முழுவதும் வெளியேறிய பின்னர், சூர்யாவின் உடலை காரில் எடுத்துக்கொண்டு வந்து திருச்சி வந்து எடமலைப்பட்டி புதூர் அருகே முட்புதரில் வீசி சென்றதாக தெரிய வந்தது.
இதையடுத்து கார் டிரைவர் பிரகாஷ் என்பவரை கைது செய்த தனிப்படை போலீசார் அவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ஆறுமுகம் மகன் மணிகண்டன், தம்பி மகன் ஆனந்த், முத்து உள்பட 6 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில் 4 பேர் கடலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்கள்.
இது தொடர்பாக தாத்தா உள்பட 2 பேரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் 6 பேரை தேடுகின்றனர்.