Skip to main content

யூ டியூப் வீடியோ பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்ததால் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

Published on 25/07/2018 | Edited on 25/07/2018
A woman suffered a death due to childbirth!


திருப்பூர் புதுப்பாளையம் பகுதியில் வீட்டில் பிரசவம் பார்த்ததில் பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் புதுப்பாளையம் பகுதியில், இயற்கையாக பிரசவித்தால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என யூ டியூப் வீடியோ பார்த்து வீட்டில் வைத்து பிரசவம் பார்த்ததாக தெரிகிறது. இதில், குழந்தை மட்டும் உயிர்தப்பியது, பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஆபத்தான நிலையில் கர்ப்பிணிப் பெண்; சாதுரியமாக செயல்பட்ட 108 ஆம்புலன்ஸ் உதவியாளர்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
 108 Ambulance paramedic delivered twins to pregnant woman in labor pain

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ். கூலித் தொழிலாளியான இவரது மனைவி சந்தோஷம்மாள் (29) நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு இந்த வாரம் பிரசவம் நடக்கும் என தோராய தேதி ஒன்றை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில் திடீரென  பிரசவ வலி அதிகமாக வந்துள்ளது. இது பிரசவ வலி என்பதை உணர்ந்த கணவர் சாம்ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆற்காட்டில் இருந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது ஆம்புலன்ஸ். அப்போது பனிக் குடம் உடைந்து வலி அதிகமானது அவரை ஆம்புலன்ஸில் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

 108 Ambulance paramedic delivered twins to pregnant woman in labor pain

நிலைமையை உணர்ந்து அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆம்புலன்ஸ்  மருத்துவ உதவியாளர் கவிப்பிரியா உடனே வேறு வழி இன்றி பிரசவம் பார்க்கத் தொடங்கினார். இதில் அந்த பெண்ணுக்கு அடுத்தடுத்து ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது.

இதனையடுத்து தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் என மூவரையும் உடனே ஆம்புலன்ஸ் மூலமாக வாலாஜாப்பேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டு நலமாக உள்ளனர்‌. பிரசவ வலிக்கு போராடிய பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்து இரட்டை குழந்தை பெற்றெடுத்த அவருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் வெகுவாக பாராட்டுகளை தெரிவித்தனர்.

Next Story

முதல்வரின் பிறந்தநாளில் கர்ப்பிணி உயிரைக் காப்பாற்றியவர்களுக்கு பாராட்டு

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Appreciation to those who rescued pregnant woman and saved her life

கடலூரில் தமிழக முதல்வர்  பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட  திமுக மருத்துவரணி, இளைஞர் அணி சார்பில் இரத்ததான முகாம் மாநகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு  மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் மருத்துவர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். முகாமில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநகர திமுக செயலாளர் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர்.

முகாமில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், மாநகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, அகஸ்டின் பிரபாகரன், பகுதி செயலாளர்கள் சலீம், நடராஜன், இளையராஜா, ஒன்றிய செயலாளர்கள் விஜய சுந்தரம், தனஞ்ஜெயன், மருத்துவ அணி அமைப்பாளர்கள் மருத்துவர் செல்வம் , மருத்துவர் சிவசெந்தில், மருத்துவர் அருண் , துணை அமைப்பாளர்கள் மருத்துவர் அக்‌ஷயா, டேவிட், இளங்குமரன், மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில் நுட்ப அணி கார்த்திக், இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், முதல்வரின் பிறந்த நாளன்று ரயிலில் ஆபத்தான நிலையில் பயணம் செய்த திருவாரூர் கர்ப்பிணியை நள்ளிரவில் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் நிர்வாகிகள், இரத்த தானம் வழங்கிய இளைஞர்கள் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மேயர், பாராட்டி சிறப்பு செய்தார்கள். மருத்துவர் அணி அமைப்பாளர் மருத்துவர் பால. கலைக்கோவன் ஏற்பாட்டில் நடந்த இரத்த தான முகாமில் “நாடும் நமதே, நாற்பதும் நமதே” என முதல்வர் குறிப்பிட்டதைக் குறிக்கும் வகையில் 40 கிலோ கேக் வெட்டிக்  கொண்டாடினர்.