Skip to main content

கஜாபுயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோலார் விளக்குடன் கூடியவீடு கட்டிக்கொடுக்க வேண்டும்

Published on 03/12/2018 | Edited on 04/12/2018
gaja


 

கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோலார் விளக்குடன் கூடிய வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது. 
 

திருவாரூரில்  நடைபெற்ற அந்த மையத்தின் மாதாந்திர கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் ‘’ டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட சம்பா சாகுபடி, தென்னை, கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீட்டு கட்டணம் கட்டவேண்டிய தேதியை நீட்டிக்க வேண்டும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் வீடுகளை இழந்தவர்களுக்கு மத்திய, மாநில அரசின் சிறப்பு திட்டத்தின்கீழ் சோலார் விளக்குடன் கூடிய புதியவீடுகளை கட்டிக்கொடுக்க வேண்டும்.
 

தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வழிகாட்டுதல் மற்றும் உத்தரவுக்கு முரணாக தனியார் செல்லிடப்பேசி சேவைநிறுவனங்கள் ஸ்மார்ட் ரீசார்ஜ் என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும் ரூ. 35-க்கு ரீசார்ஜ் செய்யவேண்டும் என்று கட்டாயப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கான சேவையை நிறுத்தி வைப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

வரும் காலங்களில் பேரிடர்களை மையப்படுத்தி பொதுவான இடங்களில் தமிழ்நாடு அரசு சார்பில் சூரிய சக்தியில் எரியும் தெரு விளக்குகள் மற்றும் அனைத்து தெருக்களுக்கும் முழு பயன்பாட்டுடன் கூடிய கை பம்புகளை அமைத்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

 

சார்ந்த செய்திகள்