Skip to main content

"போராட்டத்திற்கு மதிப்பளிக்காவிட்டால் கணக்கெடுப்பின் போது ஒத்துழைப்பும் தர மாட்டோம்"- தேசிய தவ்ஹீத் ஜமாத்!

Published on 24/02/2020 | Edited on 24/02/2020

திருவாரூரில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் உள்ளிட்ட சட்டங்கள் குறித்தான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது, கூட்டத்திற்கு ஆண்கள், பெண்கள் என ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
 

திருவாரூரில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் "குடியுரிமையும் குடிமக்களும்" என்ற தலைப்பில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் தலைவர் ஹாஜா மைதீன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் பற்றியும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் பொது மக்களுக்கு தெளிவாக விளக்கிக் கூறினர்.

thiruvarur caa explanation meeting

தேசிய மக்கள் தொகை பதிவேட்டை மத்திய அரசு கொல்லைப்புறமாக கொண்டு வந்த திட்டமாகும். எனவே இத்திட்டத்தை மத்திய அரசு முற்றிலுமாக விளக்க வேண்டும். தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று அதிமுக அறிவிக்காவிட்டால், அதிமுகவை வருங்காலங்களில் புறக்கணித்தல். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 60 நாட்களுக்கும் மேலாக நடைபெறும் இஸ்லாமிய போராட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இதுவரை செவிசாய்க்கவில்லை. இனியும் மதிக்காவிட்டால் கணக்கெடுப்பின் போது எந்தவித ஒத்துழைப்பும் தர மாட்டோம் என்பன உள்ளிட்ட 18 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்