தி.மலையில் பள்ளி மாணவர்கள் சடலமாக மீட்பு; 2 ஆசிரியைகள் சஸ்பெண்ட்
திருவண்ணாமலை மாவட்டம் கிளியாப்பட்டியில் காணமல் போன துவக்கப்பள்ளி மாணவர்கள் இருவர் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி தலைமையாசிரியை தமிழ்செல்வி மற்றும் ஆசிரியை கங்கா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.