தமிழகம் முழுவதும் உள்ளாட்சி ஒன்றியத்தில் சேர்மன் மற்றும் வைஸ் சேர்மன் தேர்தல் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்ட இடங்களுக்கு தேர்தல் மார்ச் 4 ந்தேதி நடைபெறும் என தமிழக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி தேர்தலுக்கான வேலைகள் நடைபெற்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் நடைபெறாது என அறிவிக்கப்பட்டது. அதிமுகவினரால் தேர்தல் திட்டமிட்டு ஒத்திவைக்கப்பட்டு வருகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் மார்ச் 4 ந்தேதி திமுக கவுன்சிலர்கள் 10 பேர் துரிஞ்சாபுரம் ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர். அதிமுக அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் 10 பேர் வராததால் தேர்தல் நடக்கவில்லை. மூன்றாவது முறையாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தண்டராம்பட்டு ஒன்றியத்தில் பெரிய மெஜாரிட்டியோடு திமுக கவுன்சிலர்கள் உள்ள நிலையில் மூன்றில் ஒரு பங்கு மட்டும்மே இந்த ஒன்றியத்தில் வெற்றி பெற்ற அதிமுக, திமுக வெற்றி பெற்றுவிடக்கூடாது என செயல்படுகிறது. இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனையால் மூன்றாவது முறையாக நடைபெற இருந்த மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால் கவுன்சிலர்கள் விரக்தி மனநிலைக்கு சென்றுள்ளனர்.