திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டம் ரத்து
திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து மெரினாவில் நினைவேந்தல் நடத்தியபோது மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மே 23 ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் ஆகிய 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி 4 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது.