காவிரி மேலாண்மை அமைப்பதற்கான போராட்டம் மே 17 இயக்கம் நடத்தியது.
அந்த போராட்டத்தின்போது பேசிய திருமுருகன்காந்தி,
உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைபடுத்த முடியாத, அரசியல் சாசனமுறையை நடைமுறைப்படுத்த முடியாத, ஒரு அரசை நாங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும். எதற்காக நாங்கள் இந்தியாவுக்கு வரி கொடுக்க வேண்டும். எதற்காக இந்தியாவின் கட்டமைப்புகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவின் சட்டங்களை ஏற்றுக்கொள்ளவேண்டு்ம். எதற்காக இந்தியாவின் பாராளுமன்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஒரு தேசியத்தை தேர்வு செய்துக்கொள்ள மக்களாகிய எங்களுக்கு உரிமை உண்டு. நாங்கள் தமிழ் தேசிய இனம். எங்களுக்கு இந்த உரிமை இருக்கிறது. இதை ஐநா உரிமை சாசனம் வழங்கி இருக்கிறது. அந்த சாசனத்தில் இந்தியா கையெழுத்துயிட்டிருக்கிறது. ஆகையால் அந்த அடிப்படையில் தான் சொல்லகிறோம். காவிரி உரிமை என்பதும் எங்களின் வாழ்வாதார உரிமை. உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிக்காதது ஏன். உரிய காவிரி நீர் வரும் வரை எங்களது போராட்டம் கடைசி வரை நடக்கும். இவ்வாறு பேசினார்.