சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையம் அரியலூர் மாவட்டம் தத்தனூரில் உள்ள மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதனையொட்டி செவ்வாய்க்கிழமை காலை 6 மணியிலிருந்து வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உள்ளிட்ட வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு உள்ளே செல்பவர்களை பலத்த சோதனை செய்து காவல்துறையினர் உள்ளே அனுப்பினர்.
இதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆனிஷ்மேரிசொர்னா தலைமையில் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையின் சீல் உடைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை பணிகள் தொடங்கியுள்ளன. சரியாக 8 முதல் மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளது.
சிதம்பரம் தனி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் விசிக தலைவர் திருமாவளவனும், அதிமுக சார்பில் சந்திரகாசனும், பாஜக வேட்பாளராக வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி விசிக தலைவர் தொல்.திருமாவளவன் முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.