Published on 19/06/2021 | Edited on 19/06/2021

திருவள்ளுவர் எழுதிய உலகப் பொதுமறையான திருக்குறளைப் பாடமாக அறிமுகம் செய்ய இருக்கிறது சென்னை பல்கலைக்கழகம். இதற்கான அறிவிப்பை துணைவேந்தர் கவுரி வெளியிட்டுள்ளார். ‘தொழில் தர்மத்திற்கான திருக்குறள்’ என்ற பெயரில் நடப்பு கல்வியாண்டில் பாடம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னை பல்கலைக்கழகம் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் இளநிலை மாணவர்களுக்குத் திருக்குறள் பாடமாக அறிமுகம் ஆகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.