திருச்சி ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எழுதிய கடித்தில் பொன்மலை பணிமனை இயங்க அனுமதிக்க கூடாது என்று எழுதியுள்ளர்.
அந்த கடிதத்தில், திருச்சி பொன்மலையில் 4900, கோவை போத்தனூரில் 1000, சென்னையின் பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸில் 4500, லோகோ ஒர்க்ஸில் 2000 என பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தமிழகத்தில் உள்ள ரயில்வே பணிமனைகளில் பணியாற்றுகிறார்கள். கொரானா பரவலால் மூடப்பட்டிருந்த இந்த பணிமனைகளை மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் வரும் மே 4 ம் தேதி முதல் இயங்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் சிவப்பு, ஆராஞ்சு, பச்சை, மண்டலங்களில் அனுமதிக்க கூடிய செயல்களை மே 1 ம் தேதி உத்தரவில் தெளிவுபடுத்தி உள்ளது. அதில் பிரிவு 7 இல் நகர்புறங்களில் அத்திவாசிய தொழிற்சாலைகளும், கிராமப் பகுதிகளில் அனைத்து தொழிற்சாலைகளும் இயங்கலாம் என தெரிவித்து உள்ளது. பெரம்பூர் ரயில்வே பணிமணைகள் சென்னை மாநாகராட்சியிலும், பொன்மலை பணிமனை திருச்சி மாநகராட்சி பகுதியிலும் இடம்பெறுகிறது. மேலும் இவைகள் அத்தியாவசிய தொழிற்சாலைகள் இல்லை.
பொன்மலை ரயில்வே குடியிருப்பில் 300 தொழிலாளர்களும், பெரம்பூர் குடியிருப்பில் சுமார் 600 தொழிலாளர்களும் போக. மற்ற தொழிலாளர்கள் சுற்றப்புறங்களில் இருந்து ரயில், பேருந்து, இருசக்கர வாகனங்களில் வேலைக்கு வருபவர்கள். ரயில்வே பணிமனைகள் ஆபத்தான மண்டலங்களில் உள்ளன. கரோனா சென்னையில் வேகமாக பரவியும் வருகிறது.
வேலைக்கு வருபவர்களை அன்றாடம் சோதிக்க இயலாது. பணிமனையில் கூட்டாக செய்யும் கடின வேலைகளே அதிகம். இதனால் சமூக இடைவெளி கடைபிடிப்பதும் இயலாது. போக்குவரத்து வசதிகளும் இல்லை. பணிமனைகள் செயல்பட துவங்கும். காலை 7 மணிக்கு தான் ஊரடங்கும் முடிவடைகிறது. இதனால் வேலைக்கு வருவதும் சிரமம்.
கோவை மாவட்ட ஆட்சியர் போத்தனூர் ரயில்வே பணிமனை இயங்க அனுமதி தரவில்லை. திருச்சி மாவட்ட ஆட்சியரும் ரயில்வே பணிமனைகள் இயங்க, அனுமதிக்கூடாது என வலியுறுத்தி டீ.ஆர்.இ.யு சங்கம் கடிதம் தந்துள்ளது.