Skip to main content

ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராட்டத்தை துவங்கிய திருவாரூர் மக்கள்

Published on 27/01/2019 | Edited on 27/01/2019
t

 

தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூர் அருகே திருக்காரவாசலில் ஹைட்ரோகார்பன் எரிவாயு திட்டத்திற்கு எதிராக உண்ணாவிரத அறப்போராட்டம் நடைப்பெற்றது.
 
போராட்டத்தில் 500 பெண்கள் உட்பட 1000 க்கும் அதிகமான விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்று எதிர்ப்பை பதிவு செய்தனர்.

 

th

 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளான காவிரி டெல்டா மாவட்டத்தின் கடைமடை  பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான முடிவு செய்து ஆயத்தமாகியுள்ளது மத்திய அரசு. அத்திட்டம் வந்தால் விவசாயநிலங்கள் முழுவதும் பாலைவனமாகிவிடும் என பொதுமக்களும், விவசாயிகளும் ஒருங்கினைந்து போராட்டத்திற்கு ஆயத்தமாகி பல போரட்டங்களை செய்துவந்தனர்.

 

th

 

தொடர்ந்து  ஜனவரி 26 குடியரசு தினத்தன்று திருவாரூர் மாவட்டம் திருக்கரவாசலில் உண்ணாநிலைப்போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். அதன்படி இன்று 1000 த்திற்கும் அதிகமானோர் போராட்டத்தில் கலந்துகொண்டு எதிர்ப்பை பதிவுசெய்தனர். போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய பி,ஆர்,பாண்டியன், திட்டத்தை கைவிடும் வரை போராட்டம்  தொடரும் என்றார். 

 

t4

 

குடியரசு தினத்தில் துவங்கிய நிலையில், அடுத்தக்கட்ட போராட்டத்திற்கும் தயாராகிவிட்டனர்.

 

சார்ந்த செய்திகள்