சென்னை மற்றும் கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த திரிபுரா சிட் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிதி நிறுவனம், இந்தியா முழுவதும் திரிபுரா நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அது தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கிளை அலுவலகத்தின் மூலம் நிதி வசூல் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வருடம் அந்த நிறுவனத்தில் நிதி மோசடி, என்று இந்தியாவில் பல்வேறு இடங்களில் உள்ள நிறுவனங்கள் மூடப்பட்டன
இந்த நிலையில்.. திருச்சியில்.. தில்லைநகரில் திரிபுரா சிட் நிறுவனத்தின் கிளை அலுவலகம் இருந்தது.
திருச்சி தில்லைநகரில் திரிபுரா சிட்பண்ட்ஸ் என்ற நிதி நிறுவனத்தை, நடுக்கல்லுக்காரத் தெருவைச் சேர்ந்த மணிமுருகன் என்பவர், ரூ.25 லட்சத்துக்கான ஏலச்சீட்டு சேர்ந்து தினமும் 5 ஆயிரம் வீதம்.. 20.80 இலட்சம் வரை கட்டியுள்ளார். அதற்கான டிவிடன்ட் தொகையையும் சேர்த்து 23 இலட்சம் 55 ஆயிரத்து 500 ரூபாய் என நோட்டு புத்தகத்தில் பதிவு செய்து உள்ளார்கள். முதிர்வு காலம் முடிந்தவுடன் பணத்தை திருப்பித் தராமல், நிதி நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
இதுகுறித்து தில்லைநகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு, தற்போது திருச்சி மன்னார்புரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.
திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் திரிபுரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள், அதற்குரிய அசல் ஆவணங்களுடன் திருச்சி மன்னார்புரத்திலுள்ள பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம்.
இதுதொடர்பாக மேலும் விவரங்களை அறிய பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளரை 0431-2422220, 9498105856 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர்.