Skip to main content
Breaking News
Breaking

ஜல்லிக்கட்டு, நெடுவாசல், தூத்துக்குடி போராட்டத்துக்கு இவர்கள் தான் காரணம்: எச்.ராஜா பகீர்!

Published on 03/07/2018 | Edited on 03/07/2018


ஜல்லிக்கட்டு, நெடுவாசல், தூத்துக்குடி, 8வழி பசுமைச்சாலை என அனைத்து போராட்டத்துக்கும் இவர்கள் தான் காரணம் என்று 2 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்துள்ளேன் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

 

 

முன்னதாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் படுகாயமடைந்தவர்களை மருத்துவமனையில் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த ரஜினிகாந்த், செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டம் சில சமூக விரோதிகளால் வன்முறையாக மாறியதாக கூறியிருந்தார். சமூக விரோதிகள் என குறிப்பிட்ட ரஜினியின் கருத்துக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

இதையடுத்து, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் கலவரம் குறித்து விசாரிக்கும் ஆணையத்திடம் அப்பகுதி மக்கள் ஓர் அமைப்பை குறிப்பிட்டு வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில், அந்த அமைப்பை சேர்ந்தவர்களே இளைஞர்களை மூளைச்சலவை செய்து வன்முறைக்கு துண்டியதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனால், சமூக விரோதிகள் என ரஜினி குறிப்பிட்டது இப்போது தெரியவந்துள்ளதாக கூறியுள்ள அவரது ரசிகர்கள் அன்றே சொன்ன ரஜினி என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கியுள்ளனர். இந்த ஹாஷ்டேக் டிவிட்டரில் டிரண்டாகி வருகிறது.

இந்நிலையில், அன்றே சொன்ன ரஜினி என்ற செய்தியை குறிப்பிட்டு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டிவிட்டர் பதிவில்,

ஜல்லிக்கட்டு போராட்டம், நெடுவாசல், தூத்துக்குடி ஆகிய அனைத்தும் இதே ரகம்தான் என்று 2 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்துள்ளேன். நக்ஸல், தமிழ் தேசியப் பிரிவினை வாதிகள், மதவெறி கூட்டம் அனைத்தும் ஒன்றாக சேர்ந்துள்ளனர் என கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்