விழுப்புரம் தொகுதியின் உறுப்பினர் ரவிக்குமார் மக்களவையில் மின்சாரம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், "தமிழகத்தின் மின் தேவை 9221 மெகா யூனிட் என்றும் அதே அளவு சப்ளை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மின் பற்றாக்குறையே கிடையாது. இந்தியாவின் மின் உற்பத்தித் திறன் 384 ஜி.வா. ஆக உள்ள நிலையில் உச்சகட்டமான தேவை 200 ஜி.வா. மட்டும் தான்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தகவலை ரவிக்குமார் எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் எம்.பி.ரவிக்குமார் எழுப்பிய மற்றொரு கேள்விக்கு பதிலளித்த மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, "சிறுபான்மையின மக்கள் நலனுக்காக தேசிய அளவில் கமிட்டி அமைக்கும் திட்டம் இல்லை. சிறுபான்மையினர் நலனுக்காக மாநில அளவில் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று விளக்கமளித்தார்.