Skip to main content

''தமிழ்நாட்டில் நியாயம் கிடைக்காது'' - பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபி உச்ச நீதிமன்றத்தில் வாதம்!

Published on 18/08/2021 | Edited on 18/08/2021

 

'' There is no justice in Tamil Nadu '' - Special DGP argument in the Supreme Court

 

பெண் எஸ்பி கொடுத்த பாலியல் புகாரில் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள முன்னாள் சிறப்பு டிஜிபி, ”தமிழ்நாட்டில் தன் மீதான வழக்கை விசாரிக்க வேண்டாம்” உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் சிறப்பு டிஜிபி அந்தஸ்து கொண்ட அதிகாரி மீது பெண் எஸ்பி பாலியல் புகார் அளித்துள்ள நிலையில், அது தொடர்பான விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிறப்பு டிஎஸ்பி தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், பெண் எஸ்.பி. கொடுத்த பாலியல் புகாரில் எனக்கு எதிராக போலீஸ் அதிகாரிகள் செயல்பட்டுவருகின்றனர். காழ்ப்புணர்ச்சியுடன் போலீஸ் அதிகாரிகள் செயல்படுவதால் வழக்கில் எனக்கு நியாயம் கிடைக்காது. எனவே என் மீதான புகார் குறித்த விசாரணையை தமிழ்நாட்டில் நடத்த வேண்டாம். வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்'' தெரிவிக்கப்பட்டது. 

 

ஆனால் சிறப்பு டிஜிபியின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததோடு, அந்தப் புகார் மீதான விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றவும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

 

 

சார்ந்த செய்திகள்