Skip to main content

வேலூரில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம்..!

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

There are more female voters than male voters in Vellore ..!
                                                          மாதிரி படம்

 

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜனவரி 20ஆம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

 

வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த மாவட்டத்தில் மொத்தம் 12,64,088 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 6,12,857 பேரும், பெண் வாக்காளர்கள் 6,51,091 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 140 பேரும் உள்ளனர்.

 

இதில் புதிய வாக்காளர்கள் 38,854 பேர். இறந்தவர்கள், மாவட்டம் மாறிப்போனவர்கள் என பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் 9,176 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வேலூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் சுமார் 40 ஆயிரம் பேர் அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்ககது.

 

சார்ந்த செய்திகள்