கடந்த மாதம் ஏப்ரல் 18ம் தேதி தேனி மக்களவை தொகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவு மற்றும் தேனி மாவட்டத்தில் ஆண்டிபண்டி, பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான ஓட்டு மெசின்கள் தேனி அருகே உள்ள கம்பவர் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று திடீரென தேனி தாலுகா அலுவலகத்திற்கு 50 ஓட்டு மெசின்கள் லாரியில் வந்து இறக்கியுள்ளனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தாலுகா அலுவலத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது சம்பந்தமாக தேனி தாசில்தார் கமல்ராஜிடம் கேட்டபோது, சென்னையில் உள்ள தேர்தல் கமிஷன் உத்தரவின் பேரில் 50 ஓட்டு மெசின்கள் வந்துள்ளன. அதை இறக்கி வைத்துள்ளோம். இந்த மெசின்கள் எதற்காக என்பது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்று தெரிவித்தார்.
இது சமபந்தமாக கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பல்லவி பல்தேவிடம் கேட்டபோது, இதுபற்றி பெரியகுளம் ஆர்டிஓவிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று அலட்சியமாக பதிலளித்தார்.
வாக்குப்பதிவு ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றுள்ள நிலையில் திடீரென்று இன்று 50 ஓட்டு மெசின்கள் வந்து இறங்கியுள்ளதால் தேனியில் பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது.