Skip to main content

ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் கண்மாய்களை சீரமைக்கும் பணியை தொடங்கி வைத்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

Published on 09/08/2020 | Edited on 09/08/2020

 

theni district lake and other lakes cleaning process deputy cm ops

தேனி மாவட்ட அதிமுக மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் பெரியகுளம் வட்டத்துக்கு உட்பட்ட கெங்குவார்பட்டி மருத்துவர் குளம் கண்மாய், மேலமங்கலம், நெடுங்குளம் கண்மாய் ஆகிய கண்மாய்களைச் சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பல்லவி பல்தேவ் முன்னிலையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

 

தமிழக அரசு மக்களின் வளர்ச்சியை எதிர்கொள்ளவும், நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்திடவும் விவசாயிகளின் பங்களிப்புடன் நீர்நிலைகளை புனரமைக்கும் பணியான குடிமராமத்து திட்டத்தினை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது அதனடிப்படையில்  மாவட்டத்தில் உள்ள குளங்களில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர் நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் கழிவுகளை மறு கட்டுமானம் செய்தல் நீர் வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

theni district lake and other lakes cleaning process deputy cm ops

இது தவிர அதிமுக சார்பில்  தன்னார்வலர்களின் பங்களிப்புடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள குளங்கள் மற்றும் கண்மாய்கள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் துணை முதல்வர் வழிகாட்டுதலின் படி தன்னார்வலர்களின் சார்பில் தேனி மாவட்டத்தில் 2020- 21 ஆம் ஆண்டு நிதியாண்டில் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் குளங்கள் மற்றும் கண்மாய்கள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

அதன்படி, தேனி மாவட்டத்தில் மஞ்சளாறு வடிநில கோட்டத்திற்குட்பட்ட கெங்குவார்பட்டி, மேலமங்கலம் நெடுங்குளம், பொட்டலம், வண்ணான் குளம், லட்சியம்பட்டி குளம், ஆகிய கண்மாய்கள் பெரியாறு வைகை வடிநில கோட்டத்திற்குட்பட்ட வெங்கடாசலபுரம் பாதை கவுண்டன் குளம் கண்மாய், சிலமலை குளம் கண்மாய், சோழபுரம் கண்மாய், டீ புதுக்கோட்டை கட்டபொம்மன் குளம் கண்மாய், பல்லவராயன்பட்டி தாதன் குளம் கண்மாய், கோகிலாபுரம் தாமரை குளம் கண்மாய், அனுமந்தன்பட்டி வள்ளியம்மன் குளம் கண்மாய், தொப்பம்பட்டி கண்மாய், வரதராஜபுரம் அதிகாரிக்குளம் கண்மாய், தங்கம்மாள்புரம் கோவில் பாறை என மொத்தம் 12 கண்மாய்கள் சுமார் ஒரு கோடி மதிப்பீட்டில் தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

theni district lake and other lakes cleaning process deputy cm ops

அதன் தொடர்ச்சியாக பெரியகுளம் வட்டத்துக்கு உட்பட்ட கெங்குவார்பட்டியில் உள்ள மற்ற ஆறு குளம் கண்மாய் மற்றும் மேல்மங்கலம் லட்சுமி எம்.பட்டி குளம் கண்மாய் மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்பு பணிகளை துணை முதல்வர் தொடங்கி வைத்தார். இதில் கெங்குவார்பட்டி மருத்துவர் குளம் கண்மாய் கரை ஆயிரத்து 330 மீட்டர் நீளத்திலும் 99.9 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பரப்பளவும் 17 புள்ளி 13 மி. கனஅடி கொள்ளளவு கொண்டது.

 

இதேபோன்று மேல்மங்கலம், நெடுங்குளம் கண்மாய் கரை ஆயிரத்து 920 மீட்டர் நீளத்திலும் 1467 புள்ளி முப்பத்தி ஒரு ஏக்கர் நீர்ப்பிடிப்பு பரப்பளவும் 2.82 கனஅடி கொள்ளளவு கொண்டது. மேலும் கண்மாய்களில் உள்ள செடிகளை அகற்றி தூர்வாரி கரைகளைப் பலப்படுத்தும் பணி மனையில் சட்டர் மற்றும் ஒழுங்கு பராமரிப்பு பணி சிமெண்டு எல்லைக் கற்கள் அமைத்து அளவீடு செய்யும் பணி ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி தண்ணீர் முழு கொள்ளளவை தேட வழி வகை செய்யும் பணி ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றி மருத்துவர் குளம் கண்மாய் மூலம் பாசன வசதி மற்றும் 18.6 பட்டர் ரெட்ட நிலங்களும் மேல்மங்கலம், நெடுங்குளம் கண்மாயின் மூலம் வரகா நதி அணைக்கட்டு வாய்க்கால் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று அதன் மூலம் விவசாயிகள் பயன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

theni district lake and other lakes cleaning process deputy cm ops

இதனை தொடர்ந்து மேற்கண்ட பல்வேறு பகுதிகளில் குளங்கள் மற்றும் கண்மாய்கள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் மற்றும் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் அன்பர் பணி செய்யும் திருப்பணி குழு தலைவர் ஜெயபிரதீப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, பெரியகுளம் சார்பதிவாளர் சினேகா, பொதுப்பணித்துறை மஞ்சள் அறுவடைகள், வடிநில கோட்ட பொறியாளர் கார்த்திகேயன், பெரிய குளம் வட்டாட்சியர் ரத்னமாலா, அரசு ஒப்பந்ததாரர் பாண்டியராஜன் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.