வேலூர் மாநகரம், கொசப்பேட்டையில் ஆனைகுலத்தம்மன் கோவிலில் சாமி கும்பிடுவது போல் மர்ம நபர் ஒருவர் நேற்று மாலை கோவிலுக்குள் நுழைந்து சாமி சிலை முன்பு அமர்ந்து சாமி கும்பிடுவதுபோல் இருந்தார். சிறிது நேரத்துக்கு பின்னர் சுவாமி சிலையின் கழுத்திலிருந்த தங்கத்தாலியைக் கழட்டி எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
பூஜைக்கு வந்த அய்யர் அம்மன் கழுத்தில் இருந்த தாலி காணாமல் போனதை தொடர்ந்து அதிர்ச்சியாகி இதுபற்றி கோவில் அலுவலர்களுக்கும், காவல்துறைக்கும் புகார் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒருவர் அம்மன் சிலை கழுத்திலிருந்த தாலியைத் திருடிச்செல்வது தெரிந்தது. இது தொடர்பான பரபரப்பு சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டதை தொடர்ந்து திருடனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அம்மன் கழுத்திலிருந்த தாலிய யாரோ பறிச்சிட்டாங்க, இது அபசகுணம். இந்த செயலால் ஆண்களுக்கு ஆபத்து என யாரோ வதந்தியை பரப்பிவிட அப்பகுதி பெண்கள் பரபரப்பும், அச்சமும் அடைந்துள்ளனர்.