Published on 16/04/2019 | Edited on 16/04/2019
தமிழர்களின் பாரம்பரியத்தையும், கட்டிடக்கலைக்கும் எடுத்துகாட்டாக 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உயர்ந்து நிற்கும் தஞ்சை பெரிய கோயில் திருவிழா..
பல வருடங்களாக ராஜராஜ சோழன் சிலையின்றி நடந்தது ஆனால் இந்த ஆண்டு சோழன் சிலையை பொன்.மாணிக்கவேல் மீட்டு வந்தார். சோழநாட்டு மக்கள் மகிழ்ந்தனர்.
சோழன் சிலை வந்த பிறகு நடக்கும் திருவிழா கடந்த 2 ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கிய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கி 12 மணிக்கு முடிந்தது.
பெரியநாயகி அம்பாளும், பெருவுடையாரும் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீற்றியிருக்க முளைப்பாரியுடன் பெண்களின் வரவேற்பும், மங்கள இசையும், பக்தர்களின் ஆராவாரத்துடன் விண்ணதிரும் வானவேடிக்கைகளுடன் நடந்த தேரோட்டத்தைக் காண மக்கள் திரண்டிருந்தனர்.