Skip to main content

பாவலர் ம.இலெ.தங்கப்பா மறைந்தார்!

Published on 31/05/2018 | Edited on 31/05/2018
thangappa


புதுவையைச் சேர்ந்த தமிழறிஞரும் மொழி பெயர்ப்பாளருமான பாவலர் ம.இலெ.தங்கப்பா நேற்று நள்ளிரவில் புதுவையில் காலமானார்.

இவர் தனித்தமிழ்ப் பற்றாளர். புதுச்சேரி அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் முத்திரை பதித்தவர் தங்கப்பா. இவரது ’ஆந்தைப்பாட்டு’ மிக முக்கியமான பகடி இலக்கியமாகும்.

பென்குயின் பதிப்பக வெளியீடாக வந்துள்ள ‘LOVE STANDS A LONE' என்னும் மொழிபெயர்ப்பு நூல், சங்க இலக்கியப் பாடல்களின் ஆங்கில பெயர்ப்பாகும். அவர் எழுதியுள்ள நூல்களில் இயற்கை ஆற்றுப்படை, எது வாழ்க்கை?, கொடுத்தலே வாழ்க்கை ஆகியவையும் மிகவும் குறிப்பிடத்தக்கவை.

குழந்தை இலக்கியத்திற்கான சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றுள்ளார் தஙகப்பா. வேலூர் இலக்கியப் பேரவை வழங்கும் வாழ்நாள் சாதனைக்கான விருதையும் தங்கப்பா பெற்றுள்ளார். அவருக்கு தமிழறிஞர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.


- தமிழ் சூர்யா

சார்ந்த செய்திகள்