Skip to main content

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த கல்லூரிக்கு அருகே இருந்த கண்டெயினரால் பரபரப்பு!

Published on 18/04/2021 | Edited on 18/04/2021

தென்காசி மாவட்டம், கொடிக்குறிச்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்டத்தில் வாக்குப் பதிவான ஐந்து 5 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இ.வி.எம்.) பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று (17/04/2021) இரவு அந்தக் கல்லூரியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் ஒரு கண்டெய்னர் இறக்கி வைக்கப்பட்டது. இந்த தகவல் தி.மு.க.வினர் மற்றும் அரசியல் கட்சியினருக்குத் தெரியவர அவர்கள் அங்கு திரண்டு வந்தனர். தி.மு.க.வின் தென்காசி நகர செயலாளரான சாதிர், மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபனுக்கும் தகவல் கொடுத்திருக்கிறார். கண்டெய்னரை அப்புறப்படுத்த வேண்டுமென குரல் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்தக் கண்டெய்னர் உள்ளே மின் இணைப்பு பெறுமளவுக்கு ப்ளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

 

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சாதிர், "இது கட்டுமான கம்பெனிக்குச் சொந்தமானது. கட்டுமானம் நடப்பதால் கொண்டு வரப்பட்டது என்று தெரிவித்தனர். ஸ்பாட்டுக்கு வந்த காவல்துறையினர் கண்டெய்னரை ஆய்வு செய்துவிட்டு, பின்னர் அந்தக் கண்டெய்னரை அப்புறப்படுத்தச் சொன்னதால் அந்தக் கண்டெய்னர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகே பரபரப்பு அடங்கியது. வாக்கு எண்ணிக்கை மையக் கல்லூரிப் பக்கம் கொண்டு வரப்பட்டதால் எங்களுக்குச் சந்தேகம். எங்களின் ஆட்சேபணைப்படி கண்டெய்னர் அப்புறப்படுத்தப்பட்டது" என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'என் அனுபவத்தில் இவிஎம் நம்பிக்கையானது'- கார்த்தி சிதம்பரம் கருத்து

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
nn

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இவிஎம் மெஷினுக்கு மாற்றாக வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட சில கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. அண்மையில் தேர்தல் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திமுக விவிபேட் குறித்து சந்தேகங்களை எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இவிஎம் மெஷின் நம்பிக்கையானது தான் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்த கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய கார்த்தி சிதம்பரம், விவி பேடை எடுத்து விட்டால் இவிஎம் நம்பிக்கையானது. என்னை பொறுத்தவரை எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷினில் இதுவரை என்னுடைய அனுபவத்தில் எந்த தவறும் நடந்ததாக தெரியவில்லை. ஆனால் மற்றவர்களுக்கு வேறு கருத்து இருக்கிறது என்பதை நான் முழுமையாக அறிகிறேன்'' என்றார்.

Next Story

500 டன் வெடிபொருட்களுடன் நுழைந்த 38 கண்டெய்னர்கள்; மணலியில் பரபரப்பு

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

38 containers unauthorized entry; Confusion in Manali


சென்னை மணலி புதுநகர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மலையை உடைக்க பயன்படுத்தும் சுமார் 500 டன் அளவு கொண்ட வெடி பொருட்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரிகள் புகுந்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போலீசார் லாரிகளை அப்புறப்படுத்தினர்.

 

தனியாருக்கு சொந்தமான இடத்தில் வெடிபொருள் நிரப்பப்பட்ட கன்டெய்னர்கள் கொண்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் நேற்று நள்ளிரவு நேரத்தில் ஏராளமான போலீசார் அந்த தனியார் கிடங்கில் தீவிர சோதனை நடத்தினர்.

 

அதன் பிறகு சட்ட விரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் அடங்கிய கன்டெய்னர் லாரிகளை போலீசார் அடையாளம் கண்டனர். மழை பெய்து கொண்டிருந்த நேரத்திலும் போலீசார் துரிதமாக செயல்பட்டு லாரிகளை அப்புறப்படுத்தினர். யார்டு உடைய உரிமையாளர் சுகுமாரன் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வெடி பொருட்களை நாக்பூரில் இருந்து ஏற்றி வந்து சென்னை துறைமுகத்தில் கப்பலில் ஏற்றி துருக்கி நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கான அனுமதி தனக்கு இருப்பதாக சுகுமாரன் தெரிவித்தார். உரிய அனுமதி இல்லாமல் ஒரு இடத்தில் இவ்வளவு வெடி பொருட்களை வைக்க கூடாது என எச்சரித்த போலீசார் 38 லாரிகளையும் பத்திரமாக அப்புறப்படுத்தினார்.

 

மத்திய சுங்க துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கான்கார்டு யார்டுக்கு லாரிகளை மாற்றினர். சுங்கத் துறையின் யார்டில் லாரிகளை நிறுத்தி வைக்க ஒரு நாளைக்கு ஒரு லாரிக்கு நான்காயிரம் ரூபாய் வாடகை வசூலிக்கப்படுகிறது. இதற்கான வாடகை தொகையை வெடிபொருள் நிறுவனமே வழங்கி விடுகிறது. ஆனால் தனக்கு சொந்தமான இடத்தில் லாரிகளை நிறுத்திவிட்டால், அந்த வாடகையை தானே எடுத்துக் கொள்ளலாம் என சுகுமாரன் இவ்வாறு செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. சுகுமாரன் மீது அனுமதியின்றி கவனக்குறைவாக வெடி பொருட்களைக் கையாண்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய  போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.