Published on 23/01/2019 | Edited on 23/01/2019

ஜாக்டோ ஜியோ போராட்டம் காரணமாக அரசு பள்ளிகள் தமிழகம் முழுவதும் பெரும்பாலானவை இயங்கவில்லை. அதேபோல் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பெருமளவில் பள்ளிகள் இயங்கவில்லை. இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி பள்ளிகளை ஆய்வு செய்ய சென்றார்.
திருநாவலூர் அரசு மேல்நிலைப் பள்ளி முன்பு 500க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் பள்ளி திறக்காததாலும் ஆசிரியர்கள் வராததாலும் பள்ளி முன்பு நின்றிருந்தனர்.
காரில் சென்ற முனுசாமி இதனை பார்த்ததும் காரை விட்டு இறங்கி, பூட்டி கிடந்த பள்ளியை திறந்தார். மாணவ மாணவிகளை வகுப்பறைக்கு அழைத்து உட்கார வைத்தார். பின்னர் அவரே பாடம் நடத்தினார்.
