Published on 14/03/2018 | Edited on 14/03/2018
புதுக்கோட்டை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு இன்று மாலையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியரியர்கள் கூட்டணியின் மாவட்ட தலைவர் ஜீவன்ராஜ் தலைமையில் வந்த ஆசிரியர்கள், திடீரென அதிகாரி குணசேகரன் அறையில் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் கூறும்போது..
பொதுமாறுதல் கலந்தாய்வுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் காலியாகவே உள்ளதால் பல அரசு பள்ளிகள் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் இல்லாமல் உள்ளது. அந்த காலிப்பணியிடங்களை உடனே பதவி உயர்வின் மூலம் நிரப்ப வேண்டும். அடுத்து இந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் எல்லா வேலைக்கும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அதனால் லஞ்ச லாவண்ய போக்கை கண்டித்தும் தான் இந்த போராட்டம் என்றனர்.