Skip to main content

திருக்கோவிலூரில் 5 -ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை... போக்ஸோ சட்டத்தில் ஆசிரியர் கைது 

Published on 07/09/2019 | Edited on 08/09/2019

திருக்கோவிலூர் அருகே 5ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

 Teacher arrested in sexual abuse case in thirukovilur

 

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமம் ஆதிதிருவரங்கம். இந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆசிரியராக பணி புரிபவர் ரங்கராஜ். இவர் இன்று அதே பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக தலைமை ஆசிரியருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து தலைமை ஆசிரியர் மாணவியின் பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.

மாணவியின் பெற்றோர் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலிசார், பள்ளி ஆசிரியர் ரங்கராஜை அழைத்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் கடந்த ஒரு வருடகாலமாக பள்ளியின் அருகில் உள்ள ஆசிரியரின் வீட்டிற்கு மாணவியை தனிமையில் அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்து உள்ளார். மேலும் இது குறித்து வெளியில் சொன்னால் அடித்து கொன்று விடுவேன் என மிரட்டியும் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து சிறார் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலிசார் ஆசிரியர் ரங்கராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்