திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகரத்தை சேர்ந்தவர் மணிமத்து. இவரது மனைவி கோமதி. இவருக்கு சொந்தமாக 20 க்கு 20 அளவுள்ள ஒரு ஓட்டு வீ டு உள்ளதாம். கடந்த 25 வருடங்களாக அந்த வீட்டில் தான் வசித்து வருகிறார்களாம்.
இந்நிலையில் மார்ச் 6ந்தேதி காலை 9.30 மணியளவில் ஆம்பூர் நகராட்சியில் பணியாற்றும் ஆனந்தன் என்பவர் மணிமுத்து வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் கோமதி மற்றும் அவரது மகள் இருந்துள்ளனர். வீட்டு வரி கட்டு என கோமதியிடம் ஆனந்தன் கேட்டாராம். என் வீடு ஓட்டு வீடுயென இதுவரை யாரும் வந்து இதுவரை வரி கேட்டதில்லை. திடீரென நீங்கள் கேட்கறிங்களே சார் எனக்கேட்டாராம்.
வரி கட்டுன்னா கட்டு, நீ என்ன கேள்வி கேட்கற என தகாத வார்த்தைகளில் திட்டினாராம். அக்கம் பக்க குடியிருப்புவாசிகள், வரிகட்டச்சொல்லி கேளுங்க, ஏன் திட்டறிங்க என கேட்டபோது, அவர்களையும் திட்டினாராம்.
அவரின் அநாகரிக பேச்சை கேட்கமுடியாமல் கோமதியும், அவரது மகளும் வீட்டுக்குள் போய்விட்டோம் எனச்சொல்லி சம்மந்தபட்ட ஆனந்தன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்மென நடந்ததை புகாராக எழுதிக்கொண்டு வந்து ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் புகாராக தந்துள்ளார். காவல்துறையினர் இந்த புகாரை வாங்கிக்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.