Published on 31/07/2020 | Edited on 31/07/2020

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. நேற்று 7 நாட்களுக்குப் பிறகு 6 ஆயிரம் பேரிலிருந்து குறைந்து 5,864 பேருக்கு உறுதி செய்யப்பட்டிருந்தது. அதேபோல் நேற்று 97 பேர் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் பொது முடக்கம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் பொது முடக்கம் அமலில் இருக்கும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தமிழகத்தில் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் தளர்வுகளற்ற முழுமுடக்கம் அமலில் இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.