Published on 14/06/2021 | Edited on 14/06/2021

தமிழ்நாட்டில் இன்றுமுதல் (14.06.2021) அரசு மதுபானக் கடைகள் திறக்க அரசு அனுமதியளித்திருக்கிறது. அதனையொட்டி நேற்றுமுதல் காவல்துறையினர் உதவியோடு தடுப்பு கட்டைகள் அமைத்தல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதற்கான எல்லை வட்டங்களை அமைத்தல் உள்ளிட்ட அரசு நெறிமுறைகளை மதுபானக் கடை ஊழியர்கள் செய்து முடித்தனர்.
இன்று காலைமுதல் அரசு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு, விற்பனையாளர்களும் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் சில இடங்களைத் தவிர பெரும்பாலான கடைகளில் மது வாங்குவோரின் கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது.