பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தமிழக அரசை அறிவுறுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், தட்டான்குளம்- மேலூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதிகள், "பெண்கள், குழந்தைகளின் கண்ணீரைத் துடைக்கும் வகையில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தினால் குற்றங்கள் குறையும், தனிநபர் வருவாய் உயரும். உயர்நீதிமன்றத்தின் இந்த யோசனையை தமிழக அரசு கவனிக்குமா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பள்ளிகள், குடியிருப்பு பகுதி அருகே டாஸ்மாக் வைப்பதற்கு அது ஒன்றும் புத்தகக் கடை கிடையாது. மதுவிற்பனை மூலம் வருவாய் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் மாநிலமே மதுவில் மூழ்கியுள்ளது" என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.