கரோனோ வந்தாலும் வந்தது கெட்டதிலும் ஒரு நல்லது நடந்தது என்று எல்லோரும் டாஸ்மாக் கடை பூட்டப்பட்டதை பெருமை பட்டுக்கொண்டிருக்கும் போது,சிலர் டாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளையடித்து சரக்கை அதிக விலையில் விற்றுகொண்டிருந்தனர். அதைத் தடுத்து நிறுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்ததால், ஊறல் போட்டு கள்ளச்சாராயம் காய்ச்சத் தொடங்கினார்கள்.
படம் மாடலே
இதைத் தடுத்தவர்கள் மீது சாராயம் காய்ச்சியவர்கள் துப்பாக்கி சுடும் நிலைக்குத் தள்ளப்பட அனைவரையும் போலீஸார் கைது செய்து உள்ளே தள்ளி சாராயம் காய்ச்சுபவர்களைப் பிடிக்கத் தொடங்கினர். பிறகு, குடிமகன்கள் என்ன செய்வது என சரக்கு கிடைக்காமல் தவிக்க, அதற்குப் பதிலாக சேவீங் லோசனைக் குடிக்க, சிலபேர் இறந்து போக... செய்வதறியாமல் தவித்த நபர்களுக்கு வரப்பிரசாதமாக வந்தது யூ டியூப் சமூக வலைத்தளம்.
அதில் போய் சாராயம் காய்ச்சுவது எப்படி? என்று அடித்தால் அதில் செய்முறை வருவதால் அதைக் குடிமகன்கள் பதிவிறக்கம் செய்து தன் சககுடிமகன்களுக்கு அனுப்ப... தற்போது அவரவர் வீடுகளிகளில் தாங்களாகவே சமையல் அறைகளில் பிரஷர் குக்கரில் சாராயம் காய்ச்ச ஆரம்பித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கபசுர குடிநீர் காய்ச்சுவது போல ரம்மும், விஸ்கியும், பிராந்தியும் இப்போது அவரவர் சமையல் அறையில் என்று டவுன்லோடு லிங் பரவத் தொடங்கியுள்ளது. இதைத் தடுத்து நிறுத்துவது காவல்துறைக்குப் பெரும் சவாலாக இருக்கிறது.