Published on 18/02/2020 | Edited on 18/02/2020
2020- 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கடந்த பிப்ரவரி 14- ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் உரை மீதான விவாதம் பேரவையில் நடைபெற்று வருகிறது.
![tasmac income high dmk member raised question minister thangamani speech assembly](http://image.nakkheeran.in/cdn/farfuture/MOnRSaXTp2I8dPuxNmeGIphEf5dg7U_DTKhRvvAYfv0/1582015103/sites/default/files/inline-images/thnagamani.jpg)
மூன்றாவது நாளான இன்று (18/02/2020) பட்ஜெட் உரை மீதான விவாதத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் மது விற்பனையால் தமிழகத்தில் ரூபாய் 30 ஆயிரம் கோடிக்கு வருவாய் கிடைத்துள்ளது என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, "மக்கள் குடிப்பதால் டாஸ்மாக் வருவாய் அதிகரிக்கிறது; அதற்காக என்ன செய்ய முடியும். தமிழகத்தில் படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப்படும்". இவ்வாறு அமைச்சர் பேசினார்.