Published on 28/10/2023 | Edited on 28/10/2023

தர்மபுரி மாவட்டத்தில் 64 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்யக்கூடாது என ஏற்கனவே ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி அருகே வெங்கடசமுத்திரத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் பணியாற்றி வரும் இரண்டு விற்பனையாளர்கள், மொத்தமாக மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது.
குறிப்பிட்ட அந்த டாஸ்மாக் கடையில் மாவட்ட மேலாளர் விசாரித்தபோது, புகாரில் உண்மை இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு பணியில் இருந்த இரண்டு விற்பனையாளர்களையும் உடனடியாக பணியிடைநீக்கம் செய்து மாவட்ட மேலாளர் உத்தரவிட்டார்.