Published on 08/02/2022 | Edited on 08/02/2022
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 56 ஆயிரம் வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களம் காண்கிறார்கள். இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விதித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தேர்தல் நாளன்று டாஸ்மாக் கடை செயல்பட தடை வதிக்கப்பட்டுள்ளது. மேலும் 17ஆம் தேதி காலை 10 மணி முதல் 19ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை டாஸ்மாக் கடை செயல்பட தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் முடிவு வெளியாக உள்ள 22ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.