தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு புதியதாக ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தவிர வைகோ உள்ளிட்ட ஐந்து பேரும் நேற்று மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டனர்.
இவர்களுக்கு மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத்தலைவருமான வெங்கய்யா நாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை, மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். அப்போது மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு தமிழர்களை உடனடியாக விடுவிக்கவும், தமிழகத்தில் உள்ள காவேரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கோதாவரி- காவேரி நதிகள் இணைப்பு திட்டத்தை விரைவாக முடிக்கவும், பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளதாக அன்புமணி ராமதாஸ் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.