தமிழக பகுதியில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் டி.ஜி.பி. அலுவலகம் (சென்னை)- 10 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்)- தலா 6 செ.மீ., செங்குன்றம் (திருவள்ளூர்)- 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. வரும் நாட்களில் வறண்ட காற்று வீசும்; பனிப்பொழிவு அதிகரித்து காணப்படும். வட கிழக்கு பருவமழையின் மூன்றாவது சுற்றாக மீண்டும் வரும் 12- ஆம் தேதி முதல் கனமழை பெய்ய தொடங்க வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.