திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் லலிதா ஜீவல்லரி நகைக்கடை கொள்ளையடித்த வழக்கில் சிக்கிய திருவாரூர் முருகன் பெங்களுர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். இதற்கு இடையில் முருகன் மச்சான் சுரேஷ் திருவண்ணமலையில் சரண்டர் ஆனதில் கஸ்டடி எடுத்து விசாரணை நடந்தினர். அப்போது கொள்ளையடித்த நகையில் போலீசுக்கு லஞ்சம் கொடுத்தோம் என்று வாக்குமூலம் கொடுத்தது பரபரப்பை உண்டாக்கியது.
இந்தநிலையில் பெங்களுர் நீதிமன்றத்தில் ஆஜராகி சிறை சென்ற முருகனை திருச்சி போலீசார் கஸ்டடி எடுத்து விசாரிக்கையில் திருச்சி சமயபுரம் டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த பணத்தில், இருபது லட்ச ரூபாயை, சென்னையை சேர்ந்த இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, ஏட்டு ஜோசப் ஆகியோருக்கு கொள்ளையன் முருகன் லஞ்சமாக கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் வரும் 2020 ஜனவரி மூன்றாம் தேதிக்குள் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சமயபுரம் கொள்ளிடம் போலீசார் இருவருக்கும் சம்மன் அனுப்பி உள்ளனர்.