







Published on 06/03/2020 | Edited on 06/03/2020
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக காவல்துறைக்காக ரூபாய் 95.58 கோடியில் 2,271 ஜீப், வேன், இரு சக்கர வாகனங்களின் செயல்பாட்டை முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி, பல்வேறு துறையைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.